என் மகளை ஏன் வெட்டிக் கொன்றாய்? – ராம்குமாரிடம் கதறிய சுவாதியின் தந்தை..

Share this post:

raam

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை ‘என் மகளை ஏன் கொலை செய்தாய்’ என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாக சொல்லப்படுகிறது.

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று புழல் சிறையில் நீதிபதி ஆர். சங்கர் தலைமையில் நடைபெற்ற குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவகுமார் உள்ளிட்டோர் ராம்குமாரை அடையாளம் காணும் நபர்களாக பங்கேற்றனர்.

அணிவகுப்பில் அடையாளம் காட்ட வந்தவர்கள் முன்னிலையில் 10 பேர் நிறுத்தப்பட்டனர். ராம்குமாரை போலவே முகத்தோற்றம் கொண்ட 35 பேரில் இருந்து 10 பேரை நீதிபதி சங்கர் தேர்வு செய்து அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைத்தார்.

ராம்குமாரை அவரது விருப்பம்போல 10 பேர் கொண்ட வரிசையில் எந்த இடத்தில் நிற்கவும் அனுமதி அளித்தார் நீதிபதி.

ராம்குமாரின் கழுத்தில் பிளேடால் வெட்டப்பட்டு, தையல் போட்ட அடையாளம் இருப்பது அனைவருக்குமே தெரியுமென்பதால், அடையாள அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரின் கழுத்திலும் பிளாஸ்திரி போடப்பட்டு ஒரே மாதிரியாக காட்சியளிக்குமாறு செய்யப்பட்டது

ராம்குமாரை அடையாளம் காட்ட மொத்தம் 3 முறை அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது.

முதல் ரவுண்டில் சுவாதியின் தந்தை, ராம்குமாரை சரியாக அடையாளம் காட்ட முடியாமல் குழம்பியதாகத் தெரிகிறது. எனினும் மிகுந்த யோசனைக்குப்பின் இவர்தான் என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.

இரண்டாவது ரவுண்டில் அனைவருமே சிவப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த ரவுண்டிலும் சுவாதியின் தந்தையும், சிவகுமாரும் ராம்குமாரை எளிதாக அடையாளம் காட்டியுள்ளனர்.

முதல் இரு ரவுண்டுகளிலும் ராம்குமாரை அடையாளம் காட்டினாலும் ராம்குமாரிடம் சுவாதியின் தந்தை எதையும் பேசவில்லை.

ஆனால் மூன்றாவது ரவுண்டில் ராம்குமாரை பார்த்ததும் சுவாதியின் தந்தையால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவராய், ” என் மகளை ஏன் கொலை செய்தாய்’ என திரும்ப திரும்பக் கேட்டு கதறியுள்ளார்.

உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள். இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் ”எனக் கூறி கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை தேற்றி அழைத்து வந்தனர் என்கிறார்கள்.

இந்த 3 ரவுண்டு அடையாள அணிவகுப்பிலுமே, சிவகுமார் எந்த சந்தேகமும் இல்லாமல் ராம்குமாரை சரியாக அடையாளம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...