பிரிட்டனின் புதிய பிரதமர் ஆபாச நடிகையா? – வெடித்தது புதிய சர்ச்சை..

Share this post:

padam

ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால், கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

பிரிட்டனில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்ஸ், உள்துறை மந்திரி தெரசா மே ஆகியோர் இருந்தனர்.

இதில் எதிர்பாராத திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன் இன்று (புதன்கிழமை) பதவி விலகுகிறார். தெரசா மே புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.

புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே-வின் பெயரும், பிரிட்டன் நாட்டின் பிரபல மாடலும், ஆபாசப் படங்களில் நடித்து வரும் டெரசா மே-வின் பெயரும் ஒரேமாதிரியாக இருப்பதால், பலரும் ஆபாச நடிகைதான் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளதாக நினைத்து உலகில் உள்ள பல ‘ரசிக சிகாமணிகள்’ அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர்.

‘ஒருநாளும் இல்லாத திருநாளாக’ப்படி திடீரென குவிந்துவரும் வாழ்த்து மழையில் குளித்துவரும் டெரசா மே ஆனந்தத்தில் திக்குமுக்காடிப்போய் உள்ளார்.

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே-ன் பெயர் ஆங்கிலத்தில் எழுதும்போது, Theresa May என்றும், ஆபாச நடிகை தனது பெயரை Teresa May எனவும் எழுதி வருகின்றனர். இந்த ´H´ என்ற ஒரு எழுத்தால்தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகளை கண்டு வியந்துவரும் ‘டெ’ரசா மே, ‘நான் அவளில்லை’ பாணியில் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்வதுடன், பிரதமராக பதவியேற்கவுள்ளது வேறொரு ‘தெ’ரசா மே என்று பவ்யமாக விளக்கமும் அளித்து வருகிறார்

Share This:
Loading...

Related Posts

Loading...