காதலிக்காக சண்டையிட்ட மாணவர்கள்!- படு காயமடைந்து வைத்தியசாலையில்..

Share this post:

lovwe

இரட்டையர்களான யுவதிகளில் ஒருவரை காதலித்த இரு மாணவர்களுக்கு இடையில் காதலிக்காக ஏற்பட்ட மோதல் முற்றியதில் இருவரும் பரஸ்பரம் ஜேப்பர் கட்டரில் வெட்டிக் கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அனுராதபுரம் நகரில் நடந்துள்ளது.

பகுதி நேர வகுப்பில் கல்வி கற்று வரும் பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜேப்பர் கட்டரில் வெட்டிக்கொண்டதால், இவர்களின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு மாணவன் மற்றைய மாணவன் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். இதனையடுத்து மற்றைய மாணவன் ஜேப்பர் கட்டரை பிடுங்கி தன்னை தாக்கிய மாணவரை தாக்கியுள்ளார்.

17 வயதான இந்த மாணவர்கள் அனுராதபுரம் எலயாபத்துவ மற்றும் தலாவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத காரணத்தினால், இவர்கள் பகுதி நேர வகுப்புக்கு சென்று வந்துள்ளனர்.

அந்த வகுப்பில் பயிலும் இரட்டை பிறவிகளான யுவதிகளில் ஒருவருடன் ஏற்படுத்திக்கொண்ட காதல் தொடர்பு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...