கபாலி எல்லா மொழிகளிலும் ‘சோலோ’ ரிலீஸ்.. போட்டிக்கு வேறு படங்களே இல்லை! – அடுத்த சாதனைக்குத் தயாராகும் தமிழ் சினிமா..

Share this post:

Rajini-Kabali-Teaser

கபாலி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு இது.

சர்வதேச அளவில் எந்த ஒரு இந்தியப் படமும் இப்படி ஒரு பரபரப்பைக் கிளப்பியதில்லை.

படத்தின் ரிலீஸ் தேதி என்ன? என்பதுதான் பலர் மனதிலும் உள்ள கேள்வி. ரசிகர்கள் சமூக வலைத் தளங்களிலும் வாட்ஸ்ஆப் குழுக்களிலும் இதைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இதுவரை எந்த இடத்திலும் ரிலீஸ் தேதி பற்றி மூச்சு விடவில்லை. சென்சார் முடியும் வரை நான் தேதி சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இன்று

இந்த சூழலில் கபாலி இன்று மாலை தணிக்கை செய்யப்படுகிறது. மாலை 7 மணிக்குப் பிறகு தணிக்கைச் சான்றிதழ் பெற்றதும் கபாலி ரிலீஸ் தேதியை தாணு அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...