இயக்கினால் மாஸ் ஹீரோவைத்தான் இயக்குவேன்!- அடம் பிடிக்கும் அட்லி அடுத்து யாரு?

Share this post:

adly

இன்னும் மூன்றாவது படத்தை இயக்கவே ஆரம்பிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் ஆகிவிட்டார் அட்லீ.

ஜீவாவை வைத்து தனது அசோசியட் இயக்கத்தில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரிக்கும் அவர், அடுத்து தயாரிக்கவிருப்பது நிவின் பாலி நடிக்கும் படத்தை. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை இயக்கப்போவது அட்லீ இல்லையாம். அட்லீயின் அசிஸ்டெண்ட்களில் ஒருவர்.

நிவின் பாலிக்கு அட்லீ இயக்கத்தில் நடிக்கத்தான் ஆசையாம். அட்லீயோ ‘அடுத்து ஒரு மாஸ் ஹீரோதான். அவருக்காக தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம். அந்த மாஸ் ஹீரோ மகேஷ் பாபுவாக இருக்கலாம்… அஜீத்தாகவும் இருக்கலாம்!

Share This:
Loading...

Recent Posts

Loading...