14 வயது தமிழனின் அபாரமான புதிய கண்டுபிடிப்பு…! – இவரை ஒரு தடவை பாராட்டிடலாமே..

Share this post:

thamil

குடியை குடியை கெடுக்கும் என எத்தனையோ முறை சொன்னாலும் ஒழிந்தபாடில்லை, மதுவால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.

இதனால் தினமும் எத்தனையோ சாலை விபத்துகள் ஏற்படுகின்றன, இதுபோன்ற விபத்துகளை தடுக்க தமிழ் நாட்டில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளான்.

மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவன் கூறுகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்காக மது போதையால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க ஒரு கருவியை உருவாக்கினேன்.

இக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள ஆல்கஹால் சென்சார் மது வாடையை உணரும். இத்துடன் Capacitor, Transistor சேர்ந்த ஒரு Integrated Circuit இணைக்கப்பட்டுள்ளது.

மது வாடையை உணர்ந்தவுடன் சாவி போட்டு ஸ்டார்ட் செய்யும் இடத்திற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து விடும். இதனால் இன்ஜின் இயக்கம் தானாக நின்று விடும்.

மது குடித்து விட்டு, எவ்வளவுதான் ‘உருண்டு புரண்டாலும்’ வாகனம் ஸ்டார்ட் ஆகாது, இந்த கருவியை டூவீலரிலும் வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...