எமது நாட்டிலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரமா..!

Share this post:

oor

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அங்கீகாரம் நாட்டின் அரசியல் சட்டத்தில் இருப்பதாகவும், புதிய அரசியல் அமைப்பிலும் இது பற்றிய விடயங்கள் உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மனிதர்களான அனைவருக்கும் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர் என கூறினார்.

இது நாட்டிற்கே தீ வைக்கும் முயற்சி எனவும் குற்றம் சுமத்தினார்.

ஓரினச்சேர்க்கைக்கு அரசியல் அமைப்பில் இடம் உள்ளது. மேலும் இவைகள் பற்றிப் பேசுவதற்கு நாட்டில் மதம் மற்றும் மதகுரு உள்ளார்கள். ஆனால் கூட்டு எதிர்க்கட்சியினர் ஏன் அநாவசியமாக தலையிட்டு பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டும் என கேள்விஎழுப்பினார்.

ஐரோப்பா போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் இருப்பதாகவும், வாக்கெடுப்புக்கள் மூலம் சில நாடுகளில் இவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிஷாந்த வர்ணசிங்க அறிவித்தார்.

மேலும், நாட்டின் தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடிகள் என்பவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ள உள்ளதாக பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஒரு நாட்டின் அடையாளத்தையே மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை, தன்னிச்சையாக செயற்படவும் முடியாது என இவர் கூறினார்.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அனைவரினதும் விருப்பு வாக்குகளைப் பெற்ற பின்னரே இவ்வாறான பெரிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...