முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முருகேசு தியாகராசா

Share this post:

muru

பிறப்பு -06.01.1950                       இறப்பு -24.06.2015

திதி -13.07.2015 பூர்வபக்க நவமி

யாழ்/ குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .

ஆண்டொன்று சென்றாலும்
அகலா நினைவு தந்து
அன்பிற்கு அகல்விளக்காய்
அரவணைப்பில் சூரியனாய்
பகல் இரவாய் ஓளிதந்து
பாதியிலே எமை பிரிந்து சென்றீர்களே!

உருவமாகி உணர்வுகளாகி- பின்
அருவமாகி எம்முளத்தே அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு ஆனதுவோ !

பூவாகி பிஞ்சாகி -நாங்கள்
காயாகும் வரை காத்தவரே
பூவுலகில் நாங்கள் -உங்கள்
புகழ் காக்கும் நேரத்தில்
ஏதுலகு சென்றிரோ !-என்றும்
எம் நினைப்பு உம்மோடு ……….

தகவல்
குடும்பத்தினர்

Share This:
Loading...

Recent Posts

Loading...