நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையாக கிலோ கணக்கில் சில்லறையாகச் செலுத்திய நபர்! – அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம் (Video)

Share this post:

sill

பிரான்சில் வேகமாக வாகனம் ஓட்டியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்த தொகையை சில்லரைகளாக வழங்கிய காட்சிகள் வைரலாகியுள்ளது.

பிரான்சில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Illkirch எனும் புறநகர் பிரதேசத்தில் யானிக் ரோம்னேக்கர் என்பவர் தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான 90 யூரோ (15000 ரூபா) பணத்தை செலுத்த வந்துள்ளார்.

சிறு மூட்டைகளாக எடுத்து வந்த அந்த இளைஞர், அதை அதிகாரியின் மேஜை மீது கொட்டியுள்ளார். அதில் மொத்தமும் 1,2 மற்றும் 5 cents நாணயங்கள் கொண்ட 5,100 எண்ணம் இருந்துள்ளது.

மட்டுமின்றி அரசின் நடவடிக்கை மீது தமக்கிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் அந்த நடவடிக்கை அனைத்தையும் எடுத்து வந்த கமெராவில் பதிந்து, அப்போதே தமது பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். அரசு தங்களது பணத்தை இதுபோன்ற அபராதங்களால் திருடுவதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த காட்சியானது சில மணித்துளிகளிலேயே வைரலாகியுள்ளது. பதிவேற்றப்பட்ட இந்த காட்சிகளை 20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இளைஞரின் இந்த நடவடிக்கை பல்வேறு நாளேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி செய்தி ஊடகங்களில் விவாதம் மேற்கொள்ளும் அளவுக்கு மிகவும் பிரபலமானது.

Share This:
Loading...

Related Posts

Loading...