நாளை பதவி விலகும் டேவிட் கமரூன்! பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?

Share this post:

pi

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நாளை  புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதாக என்பது குறித்த அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் சுமார் 52 வீதமான மக்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்திருந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட கமரூன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை மறு தினம் தாம் பதவி விலக் போவதாக அவர் அறிவித்துள்ளார். ,இதனையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து மற்றுமொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் விலகிக் கொண்டார்.

இதனையடுத்து, பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே பதவியேற்பார் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் தெரெஸா மே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...