ஒரே நேரத்தில் இருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழகப் பெண்..!

Share this post:

2

இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள புளிச்சகுளம் கிராமத்தை சார்ந்தவர் வேணி திருமணமானவர்.இவருக்கும் முத்துமலையாபுரத்தை சார்ந்த அசோகன் என்பவருக்கும் பல ஆண்டு காலமாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இதே ஊரை சார்ந்த சுப்பையா மகன் ஆனந்த என்பவரோடும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு வேணி வீட்டுக்கு அசோகன் சென்றுள்ளார். அப்போது வேணி வீட்டு கதவை அசோகன் தட்டியுள்ளார். ஆனால் வேணி நீண்ட நேரமாக கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

தொடர்ந்து அசோகன் கதவை தட்டியதால் வேணிச் சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்து ஆனந்த் வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியான அசோகன் ஆத்திரமடைந்துள்ளார்.

இதன்போது தப்பிச் செல்ல முயன்ற ஆனந்தை கோபத்துடன் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து அசோகன் சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது பின் தலையில் அரிவாளால் வெட்டி கீழே தள்ளியுள்ளார். பின்னர் அவர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து குற்றாலம் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று வேணியைப் பிடித்து நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது.

ஆனந்தோடும் அசோகனோடும் கள்ள தொடர்பு இருந்ததும் இருவருடனும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் அடிக்கடி கையடக்கத்தொலைபேசியில் பேசி வந்ததும் அசோகன் இல்லாத சமயம் பார்த்து ஆனந்தை வரவழைத்து உல்லாசமாக இருப்பதும், ஆனந்த் இல்லாத சமயத்தில் அசோகனை வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பொலிஸார் பல இடங்களில் அசோகனைத்தேடி கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...