வேறொரு பெண்ணிடம் முத்தம் வாங்கிய காதலனின் வாயை அறுத்த காதலிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு ..!

Share this post:

neethi

இங்கிலாந்தின் யார்க் நகரை சேர்ந்த ஹர்மன் இவரது காதலி ஜோலின்னே குன்னிங்காம். ஒருநாள் ஹர்மேன் வேறொரு பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதனைப்பார்த்து கோபமடைந்த காதலி பிளேடால் தனது காதலனின் வாயிலிருந்து காது வரை அறுத்துள்ளார், இதனால் ரத்தம் சொட்ட கீழே விழுந்த காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 18 தையல்கள் போடப்பட்டுள்ளது.

தனது காதலிக்கும் தனக்கும் ஏற்கனவே பகை இருந்ததாகவும் இதனால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என காதலன் போலீசில் புகார் அளித்ததையடுத்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையில், எனது காதலன் வேறாரு பெண்ணிடம் இருந்து முத்தம் வாங்கியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது, இதனால் அவர் அருகில் சென்று சண்டையிட்டபோது எனது கையில் அணிந்திருந்த மோதிரம் அவரது முகத்தில் பட்டு காயத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட நீதிபதி இவ்வளவு மோசமான காயங்கள் ஏற்படுவதற்கு மோதிரம் அவ்வளவு கூர்மையான ஆயுதம் கிடையாது, உங்கள் இருவருக்கும் ஏற்கனவே பகை இருந்தாலும், அது தனிப்பட்ட சம்பவம் ஆகும்.

தற்போது உங்கள் காதலனுக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள அந்த காயம் நிரந்தர வடுவாக மாறிவிட்டது, எனவே உடல்ரீதியாக ஒரு நபரை இவ்வாறு தாக்குவது கண்டித்தக்கதாகும் என கூறி அவருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...