இலங்கையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரத சேவையை அறிமுகப்படுத்தவுள்ள அரசு..!

Share this post:

rain

கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைப்பதற்கு தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக குறித்த தூணிலான பாதையை அமைப்பதற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மாத்திரம் 600 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் திட்டமானது ஜப்பானின் நிதியுதவியுடன்,பெருந்தெருக்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, பொரல, பம்பலப்பிட்டிய, நுகேகொட உள்ளிட்ட பிரதேசங்களை மையப்படுத்தி இந்தப் புகையிரத திட்டம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...