கணவனுக்கு தெரியாமல் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக் காதலில் இருந்த பலே தமிழ் பெண் பிடிபட்டார்..!

Share this post:

kallak

தமிழ்நாட்டில் நெல்லையில் இரண்டு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லையின் பாவூர்சத்திரம் அருகே உள்ள புளிச்சகுளம் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் வேணி.

திருமணம் ஆன வேணிக்கும், முத்துமலையாபுரத்தை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

பின்னர் இதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் வேணி பழக ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அசோகன் வேணியின் வீ்ட்டுக்கு வந்துள்ளார், கதவை தட்டிபார்த்துள்ளார், ஆனால் வேணி திறக்கவில்லை.

நீண்டநேரத்திற்கு பின்னர் வேணி கதவை திறந்துள்ளார், அப்போது உள்ளே ஆனந்தை பார்த்ததும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அசோகன் கீழே கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

தொடர்ந்து அரிவாளை எடுத்தும் வெட்டியுள்ளார், இதில் துடிதுடித்து இறந்து போன ஆனந்தை யாருக்கும் தெரியாதபடி விபத்து போல தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வேணி குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், ஒரே சமயத்தில் இருவருடன் தகாத உறவை வைத்திருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார், அசோகனை கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...