நேற்று இளம் பெண் கொலை – இன்று சந்தேக நபர் நஞ்சருந்தி தற்கொலை..!

Share this post:

suside

திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் கணபதிப்பிள்ளை அஜந்தினி (23) என்ற யுவதி ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று 08 வெள்ளிக்கிழமை இடம் பெற்றிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை காட்டுப் பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட நபர் பள்ளிக்குடியிருப்பு,தங்கபுரம்,தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய கந்தசாமி சுரேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...