பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி விட்டு அப் பெண்ணையே திருமணம் செய்தாலும் வழக்கு ரத்து ஆகாது! – நீதிமன்றம் அதிரடி..!

Share this post:

paaliyal

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது அமீர்கான் என்பவர் அதே மாநிலத்தை நேர்ந்த பெண்ணுடன் மும்பையில் பழகியுள்ளார். திருமணம் செய்வதாக கூறி, அந்த பெண்ணுடன் உறவு வைத்தாகத் தெரிகிறது. பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் உத்தரபிரதேசத்திற்கு சென்ற முகமது அமீர்கான் மீண்டும் மும்பை திரும்பவில்லை. அந்த பெண் போனில் விசாரித்த போது, ”இனிமேல் மும்பை வரப்போவதில்லை. உன்னை திருமணம் செய்து கொள்ளவும் மாட்டேன் ‘என கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண், மும்பை போலீசில் புகார் அளித்தார். அமீர்கான் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பயந்து போன அமீர்கான் , அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்து கொண்ட காரணத்தால், தன் மீதான பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்யவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் அமீர்கான் மனுத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.எச்.பாட்டீல் மற்றும் பி.டி.நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக மட்டுமே ஒருவர் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் கொடுத்த பின்னரே அமீர்கான் அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29–ந் தேதி திருமணம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த நாளே தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்கிறார்.இதனால், கைது நடவடிக்கைக்கு பயந்தே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் பாலியல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமாதானமாக செல்ல சட்டரீதியான வழியில்லை எனத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. எனவே அமீர்கான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது ” என தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...