மணவறை கொண்டு சென்ற மாணவன் பரிதாப மரணம்..!

Share this post:

maa

பூண்டுலோயா டன்சினன் எனும் தோட்டத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், 13 வயதான மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமண வீடொன்றிற்கு தேவையான மணவறையை ஏற்றிச்சென்றபோது, வாகனம் வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த வாகனத்தில் மூவர் பயணித்துள்ள நிலையில், இருவர் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பிரகலாதன் வினோசன் என்ற சிறுவன், தரம் ஒன்பதில் கல்வி கற்று வந்ததாகவும், பெற்றோரால் கைவிடப்பட்டு பெரியப்பாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...