இந்திய சினிமாவை கலக்க காத்திருக்கும் இந்திய நடிகர்களின் வாரிசுகள்!

Share this post:

nadikar

தலைமுறை தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தார் ஒரே தொழிலை செய்வது புதியது அல்ல. இது சினிமாவிற்கும் விதிவிலக்கு அல்ல. மற்றவர்கள் விசிட்டிங் கார்ட் உருவாக்கி கொண்டு வர வேண்டும்.

நடிகர்களின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே அவர்களது அப்பாவின் பெயரில் விசிட்டிங் கார்டுகள் கைவசம் இருக்கின்றன. அந்த வகையில், அடுத்ததாக திரையுலகை கலக்க காத்திருக்கும் இந்திய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் பற்றி தான் பார்க்கலாம்….

துருவ்
நடிப்பு சூறாவளி விக்ரமின் மகன் துருவ். உருவத்தில் அச்சு எடுத்தது போல அப்படியே விக்ரம் போலவே இருக்கும் துருவ. நடிப்பிலும், ஈடுபாட்டிலும் அதே போன்று இருந்தால் கண்டிப்பாக அப்பாவை போலவே திரைத்துறையில் கலக்க வாய்ப்புகள் அதிகம்.

சஞ்சய்
இளையதளபதி விஜயின் அன்பு மகன். இப்போது நடிப்பில் ஆர்வம் இல்லை எனிலும், அப்பாவின் படங்களான போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்களில் பாடல்களில் தலையை காண்பித்துவிட்டு சென்றுள்ளார் என்பதால், எதிர்காலத்தில் இவரும் கோலிவுட்டில் சின்ன தளபதியாக களமிறங்கலாம்.

நவ்யா
அமிதாப், ஜெயா பச்சன் அவர்களது பேத்தி தான் நவ்யா. பாலிவுட் நடிகை ஆவதற்கான நாளினால், ஹாட் அண்ட் கியூட் லுக்கில் வளர்ந்து நிற்கிறார் நவ்யா.

ஆர்யன் கான்
கிங் ஆப் கான் என புகழப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். பிஞ்சிலேயே பழுத்து ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி புகழ் பெற்ற நபர். என்னதான் இருந்தாலும், புலிக்கு பிறந்தது பூனையாகுமே என்பது போல ஓர் ஹீரோ என்ற இமேஜிலேயே வளர்ந்து வருகிறார் ஆர்யன் கான்.

இப்ராஹிம் கான்
சயப் அலிக்கானின் மகன் இப்ராஹிம் கான். வயது 15 தான் ஆனால், பார்பதற்கு இப்போதே பாலிவுட் ஹீரோ போலவும், விட்டால் அடுத்த ஆண்டே தனக்கான ஜோடியை பிடித்துவிடுவார் என்பது போலும் இருக்கிறார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...