இலங்கையில் நாடு பூராகவும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! உங்கள் பிரதேசம் எப்படி..?

Share this post:

pre

நாடு பூராகவும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோர் இலங்கையின் பிரதான நகரங்களில் இருப்பதாகவும், இவர்கள் 17 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறுமை காரணமாகவே அதிகமானோரர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும், பாடசாலை மாணவிகளும் இதில் இணைவதாகவும் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொழில் தொடர்பான ஆய்வறிக்கை மூலமும் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகையின் அதிகரிப்பும் இதற்கான பிரதான காரணம் என்றும், அதிகமாக ஹப்புத்தளை, பண்டாரவளை, எல்ல, தம்புள்ள, சீகிரியா மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலே குறித்த பாலியல் தொழில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...