பிரபல சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஹோல்சீமை 5800 கோடி கொடுத்து வாங்கும் இலங்கைத் தொழிலதிபர்..! – எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்..?

Share this post:

holcim

சுவிட்ஸலாந்தின் முதன்மை நிறுவனத்தினால் விற்கப்படவுள்ள இலங்கை ஹோல்சீம் சீமெந்து நிறுவனத்தை வாங்குவதற்காக இலங்கையின் வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

நந்தசேன லொகுவிதாரண என்ற குறித்த வர்த்தகர் இலங்கையின் பிரபல தனவந்த அரசியல்வாதி ஒருவரின் நிதி நிர்வாகங்களை கவனித்து வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வர்த்தகர் 5800 கோடி ரூபாய்களை வழங்கி குறித்த சீமெந்து நிறுவனத்தை வாங்குவதற்கு முன்வந்துள்ளதோடு, குறித்த நபர் டுபாய் நாட்டின் மெரியட் ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு தொழிநுட்ப அதிகாரியாக பணிபுரிந்தவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என அனைவரும் வியப்படையும் நேரத்தில் செல்வந்த அரசியல் குடும்பத்தின் பணமே இதுவென ஒரு சாரர் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் பணமோசடியின் கீழ் சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும், அது இதுவரை சாத்தியமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...