மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை – அடித்துக் கொன்ற கும்பல்..!

Share this post:

adi

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மகளை கிண்டல் செய்த போதை கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்தவர் 52 வயதான ரமேஷ். நேற்று மாலை ரமேஷ் தனது 2-வது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சாவக்காட்டிலுள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வீடு திரும்பியபோது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று குடிபோதையில் மோட்டார் சைக்கிள் செல்லும் பாதையை வழி மறித்து நிறுள்ளனர். தொடர்ந்து ரமேஷின் மகளை கிண்டல் செய்யவும் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ் மகளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு குடிபோதையில் மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்க நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த போதை கும்பலை தட்டிக்கேட்டதை அடுத்து ரமேஷிற்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே அந்த சாலை வழியாக வந்த சிலர் ரமேஷ் படுகாயங்களுடன் கிடப்பதை அறிந்து சாவக்காடு பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரமேசை மீட்டு சாவுக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரமேசின் உறவினர்கள் கூறுகையில் மகளை கிண்டல் செய்த போதை கும்பலை தட்டிக்கேட்டபோது அவர்கள் ரமேசை கடுமையாக தாக்கியுள்ளனர். அதனாலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

அந்த கும்பல் குறித்து பொலிசார் விசாரித்தபோது அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும். அவர்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து அந்த கும்பல் கூலிப்படையா? முன்விரோதம் காரணமாக ரமேஷ் கொல்லப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...