மகனின் அழுகுரல் கேட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த சோகம்..!

Share this post:

SAA

திருகோணமலை, கூட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 04 வயதுடைய எஸ்.மதுசான் என்ற சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை பாம்புக் கடிக்கு உள்ளாகி மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சிறுவனின் தாய் கிணற்றடியில் ஆடைகளைக் கழுவிக்கொண்டிருந்த அதேவேளை, சிறுவன் கிணற்றடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். திடீரென்று இச்சிறுவனின் அழுகைச் சத்தத்தை கேட்டு தாய் அவதானித்த போது, அங்கு புடையன் பாம்பு ஒன்று காணப்பட்டதுடன், அப்பாம்பு சிறுவனையும் கடித்துள்ளது.

உடனடியாக கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...