7 வயது சிறுமியைச் பாலியல் பலாத்காரம் செய்து பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சிறுவன்..!- கொலை நகரமாக மாறிவரும் தமிழ்நாடு..!

Share this post:

sir

தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம்.

7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (எ) ராஜா. இவரது மனைவி மோகனவள்ளி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

அதில் ரம்யா என்ற 7 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இந்த சிறுமிதான் இப்படிக் கொடூரமாகக் கொல்லப்பட்டு உள்ளார்.

ரம்யாவின் சித்தப்பா ரமேஷ் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது,

கடந்த 2-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்கு மிட்டாய் வாங்க குழந்தை போனாள். 7 மணி ஆகியும் திரும்பி வரவில்லை.

ஊர் முழுக்கத் தேடினோம். கிடைக்காததால் போலீஸில் புகார் கொடுத்தோம். அவர்களும் வந்து தேடினார்கள். யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டார்கள். உடனே ஊர்க்காரர்கள், சரவணன் மீதுதான் சந்தேகம் என்று சொன்னார்கள்.

இந்த சரவணன் 7 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை மறைவான இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போய் அந்தக் குழந்தையின் ஆண் உறுப்பை கடித்திருக்கிறான். குழந்தை கதறி இருக்கிறது.

அதைப் பார்த்தவர்கள் சரவணனைப் பிடித்து ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்தனர். அவன் ஊருக்குள் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். இதையடுத்து அவன் அவங்க அம்மாகூடவே ராயக் கோட்டைக்குச் சென்றுவிட்டான். தாத்தா மட்டும்தான் இங்கு இருந்தார்.

ஆனால், குழந்தை காணாமல் போனதற்கு முதல் நாள் சரவணன் இங்கு வந்திருக்கிறான். அதனால், இவன் மீது சந்தேகம் என்று ஊர்க்காரர்கள் கூறினர்.

ரம்யா காணாமல் போன் நாளன்று இரவே போலீஸார் அவனிடம் விசாரித்ததோடு, அவன் வீட்டிலும் தேடினார்கள். தடயம் ஏதும் கிடைக்க வில்லை. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவனிடம் துருவிதுருவி விசாரித்தார்கள். இல்லவே இல்லை என்று சொல்லிவிட்டான்.

வீட்டின் பூஜை அறைக்குள் தேடும்போது துர்நாற்றம் அடித்தது. ஒரு பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது ரம்யா அங்கு பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்’’ என்று அழுதார்.

இதுபற்றி போலீஸார் கூறியதாவது,

சரவணனின் அம்மா ரூபா. இவர் ராயக்கோட்டையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சரவணன் பிறந்ததும் கணவரோடு வாழப்பிடிக்காமல், ராயக்கோட்டைக்கு வந்து இன்னொருவரோடு வாழ்ந்து வருகிறார்.

சரவணன் அம்மாவோடு ராயக்கோட்டையில்தான் இருக்கிறான். ஒரே பையன் என்பதால் ரொம்பச் செல்லம் கொடுத்துவிட்டார்கள். அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

10-ம் வகுப்பு படித்திருக்கிறான். இவனிடம் 11 செல்போன்கள், 20 மெமரி கார்டுகள், 5 பென் ட்ரைவ்கள், 1 லேப்டாப் என ஹைடெக் ஆக இருக்கிறான். 24 மணி நேரமும் மொபைலில் ஆபாசப்படம் பார்க்கிறார். ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை டவுண்லோடு செய்து வைத்து அதையும் பார்த்துக்கொண்டு இருப்பானாம்.

அவனோட தாத்தா ராயக்கோட்டைக்குச் சென்றவர் 1-ம் தேதி அவனை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறார். 2-ம் தேதி சம்பவத்தன்று தாத்தா வெளியில் போய்விட்டார்.

வீட்டுக்குள் லேப்டாப்பில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ரம்யா தனியாகக் கடைக்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான்.உடனே ஓடிப்போய் ‘எங்க வீட்டில் பிஸ்கெட் இருக்கு. கொடுக்கிறேன் வா’ என்று கூட்டிட்டுப் போய் கதவைத் தாழிட்டுக்கொண்டு டி.வி சவுண்டை அதிகமாக வைத்துவிட்டு பூஜை அறையில் பலாத்காரம் செய்திருக்கிறான்.

குழந்தை சத்தம் போட்டிருக்கிறது. கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உறவுக்கு முயன்றிருக்கிறார்.பிறகு, குழந்தையின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் பிளேடால் கிழித்து ஈயப்பாத்திரத்தில் திணித்து மூடிவைத்திருக்கிறான்.

வெளியில் எல்லோரும் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்ததால் அன்று இரவு எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு நாள் ஆனதால் துர்நாற்றம் வீசும் என்பதால் துர்நாற்றத்தைப் போக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் அவங்க தாத்தாவை ஆட்டுத் தலை வாங்கி வரச்சொல்லி அதை அவரே நெருப்பில் வாட்டி குழம்பு வைத்துச் சாப்பிட்டு இருக்கிறான்.

போலீஸார் வீட்டுக்குள் புகுந்து தேடும்போது மாட்டிக்கொண்டான் என்றார்கள்.

இதுபற்றி டி.எஸ்.பி நடராஜன், இந்தப் பையன் மீது பல பாலியல் துன்புறுத்தல் புகார்கள் சொல்கிறார்கள். இவ்வளவு சின்ன வயதில் கிரிமினல் சிந்தனைகள் எல்லாம் இருக்கிறது.

இவனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டோம் என்றார்.

சமூகம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.

Share This:
Loading...

Related Posts

Loading...