மீனவர்களின் பிரச்சினைகளுக்காக இந்தியாவுடன் யுத்தம் செய்ய முடியாது – பிரதமர்..!

Share this post:

ranil

இலங்கை இந்திய மீனவப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியாவுடன் போர் தொடுக்க முடியாது என்றும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூடியதுடன், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் பிரதமரிடம் வினா தொடுக்கும் நேரம் ஆரம்பமாகியது.

இதன்போது, கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சி கொறடாவுமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்புகையில்,

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என பலதரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றதன் உண்மைத்தன்மை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீனவப் பிரச்சினைக்காக இந்தியாவுடன் போர் தொடுக்க முடியாது என்றும், இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன், இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்பதுடன், இந்திய ரோலர் ஒருபோதும் படகுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

Share This:
Loading...

Related Posts

Loading...