ஈழத்தமிழர்களை பொருளாதார அடிமைகள் ஆக்க போகின்றோமா ? பா .உ .சிவமோகன் கேள்வி

Share this post:

08sivamohan

வரலாற்று சிறப்பும் அடையாளங்களும் மிக்க ஒரு இனத்தை அடியோடு வேரறுக்கவேண்டுமாயின் அவ்வினத்தில் பொருளாதாரத்தில் கைவைக்க வேண்டும் .அவ்வினத்தை பொருளாதார அனாதைகளாக்க வேண்டும் .கலை கலாசாரத்தை பண்பாடுகளை பின்பற்றாமலிருக்க வேறொரு விடயத்தில் நாட்டம் கொள்ள வைக்க வேண்டும்.வரலாறுகளையும் தம்மினத்தின் தார்மிக கடமைகளையும் மறந்து குறிக்கோள் இல்லாத வாழ்க்கையினை அவ்வினத்தின் இளம் சந்ததியினர் வாழவைக்க வேண்டும்.குறித்த இனத்தின் அடையாளங்களை அழிக்கின்ற போது அவ்வினத்தின் சந்ததிகள் அதை தட்டிக்கேட்க்காத அளவில் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இப்படியாக ஒரு இனத்தை குறிப்பிட் ட காலப்பகுதி வைத்திருந்தால் போதும் அவ்வினம் தானாகவே அழிந்துவிடும் என கடந்த கால உலக விடுதலை வரலாறுகளும் இன சுத்திகரிப்புக்களும் எமக்கு பாடம் கற்று தந்திருக்கின்றன.

இன்று எம்மினத்தின் மீதும் எம்மினத்தின் தார்மிக தலையாக இருந்த யாழ்ப்பாணத்திலும் வவுனியாவில் திட்டமிட்ட ஏராளாமான விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளன.எம்மிளம் சந்ததிகள் மாணவர்கள் வேறொரு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டன.எமது பிரதேச கலை கலாசார பண்பாடுகள் செல்லாக்காசுகளாலாயும் அனாதைகளாயும் ஆக்கப்பட்டு விட்டன. தமிழினத்தை எப்படி கத்தியின்றி இரத்தமின்றி சத்தமின்றி அழிப்பது என்று இன்றயை ஆடசியாளர்களுக்கு நன்றாக தெரியும்.அதற்கு ஏற்றாற்போல் நாமும் போலிக்கவுரவம் பார்த்து மக்களை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றோம்.தமிழன் பொருளாதார நிறைவு பெறக்கூடாது என்பதில் பலரும் குறியாக இருக்க நாம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய இந்த சூழ்நிலையில் எமக்குள் நாம் அதிகார செல்வாக்கு பலம் பார்ப்பதை மக்கள் ஒரு போதும் தொடர்ச்ச்சியாக ஏற்றுக்கொள்ள போவதில்லை .

மேய்ப்பன் இல்லாத மந்தைகளாய் ஈழத்தமிழ் மக்கள் அனாதைகளாய் விடப்படட நிலையின் மாகாண சபை தேர்தலை எதிர்கொண்டு நாமிருக்கின்றோம் உங்களை பாதுகாக்க என்று நம்பவைத்துதான் ஆடசியில் அமர்ந்திருக்கின்றோம் அதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.இன்னமும் விதவைகள் அங்கவீனர்கள் என போரின் வடுக்களை உடலிலும் வாழ்விலும் சுமந்து வாழும் ஏராளமான மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் நாம் தொடர்ச்ச்சியாக புலம் பெயர் நாடுகளை நம்பி இருக்க முடியாது அவர்களின் உதவிகளை பெற்று நிரந்தர தொழில் வாய்ப்புக்களை நாம் எம்மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மக்களுக்கு செய்வதற்கு நிறைய இருக்கின்றது இதை தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரிகள் என யாவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால் மட்டுமே செய்து முடிக்க முடியும் தடைகளை தாண்டி செல்ல முடியும் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறேன்

Share This:
Loading...

Related Posts

Loading...