எப்படி இருந்த இவங்க இப்படி ஆயிட்டாங்க – அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மாறிய தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்..! (Photos)

Share this post:

மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் சில மாற்றங்கள் நம் கண்ணை நாமே நம்ப முடியாத அளவு இருக்கும். அதிலும் அந்த மாற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பிரபலமிடம் ஏற்பட்டிருந்தால், வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும்.

நமது கோலிவுட் பிரபலங்கள் பல முறை இந்த வியப்பை அவர்களது ரசிகர்களுக்கு அளித்திருக்கின்றனர். தல, தளபதி, சுள்ளான், விரல் நடிகர் என கோலிவுட்டின் பெரும்பாலான புகழ் பெற்ற நடிகர்கள் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

விக்ரமை மட்டும் இதில் உள்ளடக்க முடியாதும் ஏனெனில் அவர் மாற்றம் செய்யாமல் நடித்தால் தான் அது மாற்றம். ஏனெனில், விக்ரம் “வேற லெவல்” நடிகர் எல்லாத்தும் மேல என்று ஒன்று இருந்தால் விக்ரம் “அதுக்கும் மேல” இருப்பவர்.

சரி, இனி மாற்றம் ஏற்படுத்தி தங்களது ரசிகர்களை வியப்பின் உச்சிக்கி கூட்டி சென்ற நடிகர்களைப் பற்றிக் காணலாம்.

தல
லிங்குசாமியின் இயக்கத்தில் தல நடித்த “ஜி” திரைப்படம் வரையில் உடல் எடை அதிகரித்து தான் காணப்பட்டார். திடீர் என்று ஒரு வார இதழ் பத்திரிக்கையில் மெலிந்து ஒல்லியாக உருமாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி அசத்தினார் தல. இந்த திடீர் மாற்றத்தை யாராலும் மறக்க இயலாது. தொடர்ந்து சில படங்களில் அதே தோற்றத்தைப் பின்பற்றி வந்தார் தல.
ajith

தனுஷ்
தனிஷ் சுள்ளான் என்ற பெயரோடு திரிந்துக் கொண்டிருந்த காலம் அது. இப்போதும் அவர் ஒல்லியாக தான் இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும். பொல்லாதவன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது “சிக்ஸ் பேக்” தோற்றம் அனைவரையும் தனுஷா இது என்று வியக்க வைத்தது.
thanush

தளபதி
தளபதி பிறந்ததிலிருந்தே மாநிறமான ஆள் தான். ஆதி வரை பாதி கருப்பில் இருந்த விஜய், திடீரென அழகிய தமிழ் மகனில் ஜொலி ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். நீங்கள் கூர்ந்தது கவனித்திருந்தால் இந்த மாற்றத்தை கண்டுணர்ந்திருக்கலாம்.
vijay

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு
விரலை ஒசத்தியும், தனது ஸ்பெஷல் வித்தைகளை காட்டியும் மிரள வைத்துக் கொண்டிருந்த சிம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தனது கெட்அப்பை மாற்றி, நடிப்புத்திறனை மாற்றி வேறு விதமாக தோன்றினார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், மீண்டும் நான் சிம்பு தான் என்று “ஒஸ்தி” படத்தில் ஒசத்தியாக காட்டினார்.
simpu

பரத்
சிக்ஸ் பேக் பரத்தின் சிக்ஸ் பேக் பற்றி ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரை நடிகர்களே வியந்து பார்த்தனர். காட்டுத்தனமாக ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக இருந்தது அவரது தோற்றம். ஆனால், படம் தான் கொஞ்சம் டொங்களாகிப் போனது!
barath

இடுப்பழகி நயன்தாரா
அடுப்பு போல இருந்த இடுப்பை அணைக்க எதுவாக, வடித்து வைத்த சிலைப் போல உருமாறி அசத்தினார் நயன்தாரா. “வல்லவன்” படம் இதற்கு ஒரு காரணம். (அந்த வல்லவனே சிம்பு தானே!!).
nayantharqa

உதயநிதி ஸ்டாலின்
அரசியல் பின்புலம் கொண்டிருந்தும், தனது சொந்த முயற்சியில் பெரிய நடிகர் ஆகாவிட்டாலும், நடிகர் ஆக வேண்டும் என்ற பெரும் கனவோடு சுற்றி வருகிறார். அவர் நடிக்க வந்ததே பெரும் வியப்பு தான்.
uthayanithi

“விக்டர்” அருண் விஜய்
பெரிய நடிகர் ஆவதற்கான அனைத்துத் திறமைகள் இருந்தும், பெரும் இடம் கிடைக்காமல் போனவர் அருண் விஜய். ஆயினும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரது விக்டர் கதாப்பாத்திரத்திற்காக அவர் காட்டிய மாற்றம் பெருமளவில் ரசிகர்களுடன் வரவேற்பைப் பெற்றது.
arunvijay

வலியவன்
ஜெய் வலியவன் படம் பார்த்த பலருக்கு முன் பாதியில் படத்தில் நடித்திருப்பவர் ஜெய்யா? அல்லது விஜய்யா? என்ற குழப்பம் நிலவியது. முகத் தோற்றம், உடல் வாகு, நடனம் என அனைத்திலும் விஜயாக மாறியிருந்தார். பின் பாதியில் உடலை ஏற்றி அவர் சண்டைப் போடும் காட்சியைப் பார்த்த அனைவரும் வியந்துப் போயினர்.
jei

அமலா பால்
இவரது திரையுலகில் நுழைந்த முதன்மை காலகட்டப் படமான “சிந்து சமவெளி” படத்தைக் கண்டவர்கள். “ஓ மச்சான் இது ஆள் இல்லடா…….” வகையிராவில் பேசிக் கொண்டிருந்தனர். பின்பு இவரது அடுத்தப் படமான “மைனா”வில் தனது விழிகளாலேயே அனைவரின் இதயத்தையும் கொய்துவிட்டார்.
amlaapaal

Share This:
Loading...

Recent Posts

Loading...