“என்னை காதலிக்க மறுத்தால் உனக்கும் சுவாதி கதி தான்”: மிரட்டிய வாலிபரை சிறையில் அடைத்த பொலிஸ்..!

Share this post:

verudd

என்னை காதலிக்க மறுத்தால் சுவாதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தான் உனக்கும் என மாணவியை மிரட்டிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகரை சேர்ந்த 12–ம் வகுப்பு மாணவி விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவியை பல மாதங்களாக தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு செல்வகுமார் (வயது 23) என்ற வாலிபர் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவியை செல்வகுமார் வழிமறித்து வரும் 11–ந் திகதிக்குள் நீ உன் காதலை சொல்லாவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு நடந்த கதி தான் உனக்கும் ஏற்படும் என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து மாணவியின் தாயார் கோயம்பேடு பொலிசில் புகார் செய்துள்ளார், அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்பவர் என்பதும், சிதம்பரம் ரெயலடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வகுமாரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...