திடீரென்று ஜனாதிபதியான கோத்தபாய!

Share this post:

inaiyam

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் இடம்பெற்றதிருமண நிகழ்வொன்றின் போது எதிர்கால ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற திருமண வைபவம்ஒன்றில் கலந்து கொள்ள கோத்தபாய சென்றிருந்த வேளையில்,இங்கு 500 விருந்தினர்கள்கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி இடம்பெற்ற குறித்த திருமண வைபவத்தின் போது திடீரென பிரமுகர்ஒருவர் தனது மனைவியுடன் இங்கு வருகைத் தந்துள்ளதாகவும், அவர் இலங்கையின்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்றும், அவரே இலங்கையின் எதிர்கால ஜனாதிபதிஎன்றும் குறித்த விழாவின் நடுவே ஒலிவாங்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This:
Loading...

Related Posts

Loading...