மனைவியின் கள்ளகாதலனின் ஆண் உறுப்பை வெட்டிய நபருக்கு சிறை..!

Share this post:

hjsil

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், இக்கி கொட்சுகோய் (வயது 25). முன்னாள் குத்துச்சண்டை வீரர். இவரது மனைவி ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், அந்த நிறுவனத்தின் அதிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நாள், இக்கி தனது மனைவி, சட்ட நிறுவன அதிபருடன் ஒன்றாக படுத்திருப்பதை கண்டார்.அப்போது அவரிடம் மனைவி, என்னை இவர்தான் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டார்’ என சட்ட நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த இக்கி, உடனே தோட்டத்தில் செடிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தரிக்கோலை கொண்டு, சட்ட நிறுவன அதிபரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்து, கழிவறையில் வீசி விட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இக்கியின் மனைவியின் கள்ளக்காதல் அம்பலத்துக்கு வந்தது. இருப்பினும், மிகவும் ஆபத்தான குற்றத்தை செய்திருக்கிறார் என கூறி இக்கிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி காஜூனோரி கரேய் தீர்ப்பு அளித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...