வேலைக்குச்சென்று திரும்பிய கணவன் பிணமாகக் கிடந்த மனைவி -கொலையா தற்கொலையா..? இலங்கையில் தமிழ் பெண் ஒருவருக்கு நடந்த சோகம்..!

Share this post:

girl

நுவரெலியா ராகல பகுதியில் தமிழ் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் கணவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது தனது மனைவி வீட்டில் இறந்து கிடப்பதை அவதானித்தவர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த யுவதி தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்த பிற்பாடே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...