குறட்டை விட்ட மனைவி விவகாரத்துப் பெற நீதிமன்றம் சென்ற கணவன் – இலங்கையில் சம்பவம்..!

Share this post:

sud_court_260815

குருவிட்ட பகுதியில் இளம் தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மனைவியின் பழக்கங்கள் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நித்திரையின் போது தன் மனைவி குறட்டை விடுவதன் காரணமாக தன்னால்நிம்மதியாக உறங்க முடியவில்லை என கணவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இந்த பிரச்சினை காரணமாக இவர்கள்இருவருக்கும் அடிக்கடி சண்டை இடம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதற்காக பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதும் இது பலனிக்கவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் யாத்திரைக்காக இந்த ஜோடி கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர், அப்போதுஇரவு உறக்கத்தின் போது மனைவி குறட்டை விட்டதில் அங்கிருந்த அனைவரும் உறங்காமல்எழும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கோபமுற்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியுடன் மீண்டும்வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக மனைவியை விவாகரத்து செய்வது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவன்குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...