தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே மகன் தூக்கிட்டு தற்கொலை!

Share this post:

thookku

தனது தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் எப்பாவல – கன்டக்குளம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் தந்தை கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கருமகாரிய நிகழ்வுகள் இன்று இடம்பெறவிருந்தன.

இதற்கான அனைத்து பொருட்களையும் அவர் வாங்கிக்கொடுத்துள்ளார். எனினும், தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவர், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக குறித்த நபர் ஒரு வகை உரத்தினை உட்கொ ண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும், அது பயனளிக்கவில்லை.

இந்நிலையில், தனது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...