நண்பர்களுக்காக உயிரைத் தியாகம் செய்த இளைஞன்!

Share this post:

maranam

நண்பர்களுக்காக உயிரை தியாகம் செய்வது போன்ற சம்பவங்களையும், காட்சிகளையும் சினிமாவில் நாம் அனேகமாக பார்த்திருப்போம்.

ஆனால் தன் நண்பர்களுக்காக தன் உயிரயே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

ஆம் கடந்த வாரம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டதனை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இதன் போது சுமார் 20 பேர் வரை தீவிரவாதிகளினால் கொல்லப்பட்டனர். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 18 பேரை அந்நாட்டு அதிரடிப்படையினர் உயிருடன் மீட்டனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் 9 இத்தாலியர்கள், 7 ஜப்பானியர்கள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள், அமெரிக்கர் ஒருவரும், ஒரு இந்தியரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், உணவகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பணயக் கைதியாக இருந்த ஒருவர் இவ்வாறு விவரித்துள்ளார்.

உணவகத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் “நாங்கள் உள்ளூர் நபர்களை கொல்லப்போவதில்லை. வெளிநாட்டவர்களை மட்டுமே கொல்லப்போகிறோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

வெளிநாட்டவர்களை கொலை செய்த போதும் தீவிரவாதிகள், உள்ளூர் மக்களிடமும், உணவக ஊழியர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டனர்.

இதன் போதே அனைவரினது மனதையும் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று அந்த உணவகத்தில் அறங்கேறியுள்ளது.

தனது நண்பர்களையும், பிற பணயக்கைதிகளையும் விட்டு வெளியே செல்ல முடியாது எனக் கூறிய இளைஞர் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

ஃபாராஸ் ஹூசைன் என்ற உயிரிழந்த அந்த இளைஞர் பங்களாதேஷ் பிரஜையாவார். ஃபாராஸ் ஹூசைன் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருக்கின்றார்.

சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் மேற்கத்திய கலாச்சார உடையில் இரு பெண்களும் அந்த உணவகத்தில் இருந்துள்ளனர்.

ஃபாராஸ் ஹூசைன் ஒரு பங்களாதேஷ் இஸ்லாமியர் என தெரிந்ததும், தீவிரவாதிகள், அவரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

எனினும், அருடன் இருந்த பெண்கள் வெளிநாட்டவர் என்பதை அறிந்த தீவிரவாதிகள் குறித்த இரு பெண்களையும் பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டனர்.

இதன் காரணமாக, தீவிரவாதிகள் வெளியே செல்ல அனுமதித்த போதும், ஃபாராஸ் ஹூசைன் வெளியே செல்லவில்லை.

தனது நண்பர்களையும், பணயக்கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே தான் வெளியில் செல்வேன் என கூறி ஃபாராஸ் ஹூசைன் உணவகத்தின் உள்ளேயே இருந்துள்ளார்.

இறுதியில் தீவிரவாதிகளினால் கொல்லப்பட்ட 20 பேரில் ஃபாராஸ் ஹூசைனும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...