உறவு கொள்ள மறுத்த அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பி…!

Share this post:

423275-rape

தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணனின் மனைவியை கத்தியால் 11 இடங்களில் குத்திப் படுகாயப்படுத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களரம்பட்டியைச் சேர்ந்த பூங்காவனத்தின் மனைவி செல்லம்மாள். கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூங்காவனத்தின் தம்பி முருகன், தனது அண்ணனின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.இதனால் சேலத்தை விட்டு இடம் பெயர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு போய் விட்டால் செல்லம்மாள்.

ஆனால் முருகன் அங்கும் வந்து தன்னுடன் வந்து விடுமாறு செல்லம்மாளை வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கத்தியை எடுத்து செல்லம்மாளை சரமாரியாக குத்தினார் முருகன்.

இதில் செல்லம்மாளின் உடலில் 11 இடங்களில் வெட்டு விழுந்துள்ளது.பிறகு ஈரோடு அரசு வைத்தியசாலையில் அவரை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொலிஸார் முருகனைக் கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...