இலங்கை அணியின் அதிரடி கிரிக்கட் வீரர் குசல் பெரேராவுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு!

Share this post:

kuds

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊக்கமருந்து பாவித்த குற்றச்சாட்டின் பேரில் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை கிரிக்கெட் இன், சட்ட விவகாரங்களுக்கு செலவாகிய 5 லட்சம் பவுன்ட் ( சுமார் பத்து கோடி ரூபா) நட்டஈட்டை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்க வேண்டியுள்ளது.

அதேவேளை, தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வழங்கிய கட்டார் ஆய்வுகூடத்தை தடை செய்யவும் சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...