வருகிறது புதிய சடடம் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை..!

Share this post:

class

மத்திய மாகாணத்தில் ஞாயிறு தினங்கங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையின் ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதன்படி இந்த தடை இன்னும் இருவாரங்களில் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார்.

இதே நேரம் ஏனைய மாகாணங்களிலும் இவ் நடைமுறையை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது..!

Share This:
Loading...

Related Posts

Loading...