இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கைகலப்பினால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!! வவுனியாவில் சோகம் ..!

Share this post:

vavu

வவுனியா பம்பைமடு பகுதியில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணன் செல்வநாயகம் (வயது 31) வவுனியா தரணிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்ற பகுதியில் இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட கைகலப்பில் அப்பகுதி இளைஞர்களினால் மோட்டார் சைக்கிலில் துரத்திச் செல்லப்பட்டபோது குறித்த குடும்பஸ்தருடன் சென்ற ஏழு பேரும் வெவ்வேறு திசைகளை நோக்கிச் சென்றுள்ளனர்.

இரவு என்பதால் வீதிகள் தெளிவின்மை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிலில் சென்ற மூவர் மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைந்த அப்பகுதி இளைஞர்கள் இன்று காலை அப்பகுதிக்குச் சென்றபோது பலத்த காயங்களுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அவதானித்து உடனடியாக அவசர பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மற்றும் திடீர் நகர மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசேதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த குடும்பஸ்தருடன் இசை நிகழச்சிக்குச் சென்ற ஏழு பேரையும் பொலிசார் கைது செய்ததுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீதிமன்றம் பிணையில் அனைவரையும் விடுவித்துள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் வீதிப் பராமரிப்புப் பணியில் தொழில் புரிந்து வருவதாகவும் தங்கி நின்று தொழில் புரிந்து வருவதும் தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...