ஏம்ப்பா.. “லூசாப்பா” நீ.. ??

Share this post:

appa

தனது மகள் போட்டுள்ள செல்பியால் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. தந்தையும், மகளும் போட்டிருந்த செல்பி படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளன.

அந்தத் தந்தையின் பெயர் கிறிஸ் மார்ட்டின். இவரது 19 வயது மகள் காஸி மார்ட்டின். இவர் சற்றே செக்ஸியாக செல்பி படங்களை எடுத்துப் போட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது தந்தை கிறிஸ் மார்ட்டின் எடுத்தார் செல்போனை, தனது மகளைப் போலவே போஸ் கொடுத்து அவரும் எடுத்தார் செல்பிகளை. இந்த செல்பிகளை அவரும் சமூக வலைதளத்தில் போட்டார்.

இவர்கள் இருவரின் செல்பிகளும் தற்போது வைரல் ஆகியுள்ளன. தனது மகள் எப்படியெல்லாம் போஸ் கொடுத்தாரோ அதே போல இவரும் போஸ் கொடுத்து அசத்தியுள்ளதுதான் சுவாரஸ்யமானது.

இதுகுறித்து காஸி கூறுகையில், எனது தோழிகள் சிலர் இதைப் பார்த்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது என்றார் சிரித்தபடி. மேலும் அவர் கூறுகையில் எனது அப்பா ஒரு காமெடியான தந்தை என்றும் புன்னகைத்தார்.

சரி உங்க படத்தைப் பார்த்து மகள் அடக்கமாக மாறுவார் என்று நம்புகிறீர்களா என்று மார்ட்டினிடம் கேட்டால், நிச்சயம் மாற மாட்டார். இன்னும் ஒரு படி மேலே போனாலும் போவார். அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது என்று கூறிச் சிரிக்கிறார்.

பேசாம யாழ்ப்பாணம் வந்து ஒரு மாசம் தங்கிட்டுப் போங்களேன்..!

Share This:
Loading...

Related Posts

Loading...