நாட்டின் நலன் கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! பிரதமர்

Share this post:

ranil

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது.

மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கவே தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்ணான்டோவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிமால் ஸ்ரீபால டி சில்வாவும் ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடிந்திருக்கிறது என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த முதல் ஆண்டில் முன்னேற்றங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு காரணம் இந்த நாட்டின் நிலம், நில கொலைக்காரர்களால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இன்று சர்வதேசத்துடன் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நன்றிக்கூற வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...