பிரசவித்த குழந்தையை வாழைமரத் தோட்டத்தினுள் வீசி சென்ற தாய் கைது!

Share this post:

siu

மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அநாதை இல்லம் ஒன்றின் வளாகத்தில் வாழைமரங்களுக்கு இடையில் கைவிடப்பட்ட நிலையில் 07 மாதச் சிசுவின் சடலம் நேற்று (02) இரவு மீட்க்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலமாக குறித்த அநாதை இல்லத்தில் குடும்பத்தவருடன் தங்கியிருந்து சமையல் பணியில் ஈடுபட்டுவந்த இப்பெண்ணைக் கைதுசெய்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இப்பெண்ணின் வயிறு வழமைக்கு மாறாக பெரிதாகக் காணப்பட்டபோது, அது தொடர்பில் கணவர் விசாரித்துள்ளார்.

குறித்த பெண் வயிற்றில் கட்டி உள்ளதாக வைத்தியப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என கணவரிடம் கூறியுள்ளார்.

சம்பவதினம் இப்பெண்ணுக்கு அதிக இரத்தப் பெருக்கு காணப்பட்டதை அடுத்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிசுவைப் பிரசவித்துள்ள்ளார்.

இதன் பின்னர், இப்பெண் சிசுவுடன் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்த நிலையில் இப்பெண்ணைத் தேடிக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, வாழைமரங்களுக்கு இடையில் சிசு இருந்தமை தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...