கணவரின் சொல்லைக் கேட்டு நடந்த மனைவிக்கு இந்த தண்டனையா?

Share this post:

so

வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதனை சட்டவிரோதமாக பொருத்தும் ஐந்து இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு பொருத்தப்பட்ட மூன்று வாகனங்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களுடன் பெண்ணொருவரை காலி ஹியாரே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் வழங்கிய தகவல்களுக்கு அமைய ஜூல்கஹா, இமதுவ, கனங்கே, வல்பொல, உழுவிட்டிகே ஆகிய பிரதேசங்களில் உள்ள இடங்களிலும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைது செயயப்பட்ட பெண், ஜப்பானில் உள்ள தனது கணவரின் ஆலோசனையின் படியே இந்த உதிரிபாகங்களை பொருத்தும் மையங்களை நடத்தி வந்துள்ளார் என அறியமுடிகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...