வீதியின்மை காரணாமாக நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை மூன்று கிலோமீற்றர் காவிச்சென்ற பொதுமக்கள்!

Share this post:

pi

நாலாபக்கமும் பறையடிக்கும் அரசாங்கம், பல குறைபாடுகளை இன்னும் நிவர்த்தி செய்யாமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு தளவாய் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு செல்வதற்கு பாதையில்லாமல் கடற்கரை வழியாக சுமார் மூன்று கிலோமீற்றர் வரை தட்டில் கட்டி காவிச்சென்ற சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

கடலுக்குள் படகைத் தள்ளிவிடும் மீனவத் தொழிலாளியொருவர், கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடலுக்குச் செல்லும் படகுகளை, கடலுக்குள் தள்ளிவிடும் தொழிலில் ஈடுபடும் ஏறாவூர்-தளவாய், சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை கண்ணன் (வயது 35) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு, தளவாய் கடற்கரைக்குச் சென்று, வழமைப் போல் படகுகளை தள்ளிவிடும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.

குறித்த நபரும் மற்றொரு நபரும் இணைந்து படகொன்றை தள்ளிவிட்ட பின்னர், கரைக்குத் திரும்பும் போது, தன்னுடன் வந்த கிட்ணபிள்ளையை காணவில்லை என்று மற்றைய நபர் தேடியுள்ளார்.

எனினும் அவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சம்பவ தினத்தன்று அதிகளவு மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்றும் இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலத்தினை பல சிரமத்தின் மத்தியில் தமிழ் மற்றும் முஸ்லிம் நண்பர்களின் ஒத்துழைப்புடன் மக்கள் நடமாற்றம் உள்ள பகுதிக்குச் கொண்டு சேர்த்த பின்னர் உழவு இயந்திரத்தின் மூலம் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...