மீண்டும் ஒரு ஒருதலைக் காதல் கொலை – காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது

Share this post:

kola

சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது. தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய். இவரது மகள் சந்தியா (வயது 18). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேஷ்(வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்.

நேற்று மதியம் சந்தியா வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடினர். மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...