திருமணம் செய்யக் கேட்ட காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த காதலி- தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது…

Share this post:

loers

இந்தியாவின் ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவி
ஓசூர் அருகே உள்ள புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 19). ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வினய்குமார் (20). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சந்திராவும், வினய்குமாரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த சந்திராவின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலன் மீது தாக்குதல்
மேலும் சந்திராவின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். இதையறிந்த வினய்குமார் நேற்று முன்தினம் தன் பெற்றோருடன் சந்திராவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சந்திராவின் உறவினர்கள், வினய்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் சந்திராவிற்கு வினய்குமார் செல்போனில் எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) அனுப்பினார். அதில், ‘நாம் எங்காவது ஓடி போய் திருமணம் செய்து கொள்வோம். நீ இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

தற்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலை சந்திரா தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சந்திராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் வினய்குமாரை கைது செய்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...