இவர்களுக்கு எல்லாம் இன்னொரு முகம் இருக்கு தெரியுமா உங்களுக்கு..?- ஸ்பெஷல் பதிவு..!

Share this post:

ivar

சினிமாவை பொறுத்தவரை பல பிரிவுகள் இருக்கிறது. இதில் ஒருவரை நீண்ட நாட்களாக ஒரு பிரிவில் மட்டுமே பார்த்து வருவோம். சில நாட்கள் அல்லது வருடம் கழித்து தான் தெரியும் இந்த படத்தில் அந்த வேலையை இவர் தான் பார்த்தார் என்று, அதுப்போல் சினிமாவில் பிரபல துறையில் இருந்துக்கொண்டு மற்ற துறையிலும் யாருக்கும் தெரியாமல் வேலைப்பார்த்தவர்களின் சிறப்பு தொகுப்பு.

பி.சி.ஸ்ரீராம்
இந்திய சினிமாவின் நம்பர் 1 ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவிற்காகவே பலரும் படத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் இவர் இயக்குனராகவும் ஒரு சில படங்களில் தலையை காட்டினார். பலருக்கும் இவை தெரிந்திருந்தாலும், இக்கால இளைஞர்களுக்கு இது பெரிதும் தெரிய வாய்ப்பில்லை, இவர் கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும், விக்ரம் அறிமுகமான மீரா ஆகிய படங்களை இயக்கியவர்.
pc

இளவரசு
அட இளவரச தெரியாத, குணச்சித்திர கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்புவரே? என்று தான் பலருக்கும் தெரியும், ஆனால், இவர் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளரும் கூட, இது பலருக்கும் தெரியாது, சினிமாவில் முகம் காட்டிய பிறகே இவர் பிரபலமானார். இவர் விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தை ஒளிப்பதிவு செய்தது இவர் தான்.
ila

ஜெயம் ரவி
ஜெயம் ரவி தன் அண்ணன் மூலம் சினிமாவிற்கு வந்து தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர். ஆனால், ரவி உண்மையாகவே நடிகன் ஆவதற்காக சினிமாவிற்கு வரவில்லை, அவருக்குள் ஒரு இயக்குனரும் உள்ளார், ஆம், ஜெயம் ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதுவும் சாதரண ஆளிடம் இல்லை, உலகநாயகன் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
ravi

நானி
நான் ஈ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நானி, அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாய் இவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். ஆனால், இவரும் இதற்கு முன் தெலுங்கில் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மட்டுமின்றி ரேடியோவில் RJவாக பணியாற்றியவர்.
ee

மாதவன் & ஷாருக்கான்
மாதவன் மற்றும் ஷாருக்கான் இருவருக்குமே சினிமாவிற்கு வந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை அப்போது இல்லை, ஏனெனில் நாம் தற்போது பார்த்து ரசித்து வரும் ஹிந்தி டப்பிங் சீரியல்களின் 90’ஸ் ரோமியோஸ் இவர்கள் தான், இருவரும் சீரியல் உலகில் நீயா நானா என போட்டிப்போட்டு நடித்தவர்கள்.
maatha

நட்ராஜ்
நட்ராஜ் மிகப்பெரும் ஒளிப்பதிவாளர் என்பது புலி படம் வந்த பிறகு தான் பலருக்கும் தெரியும், ஆனால், உண்மை என்னவென்றால் தமிழகத்தில் நட்ராஜை ஒரு நடிகனாக தான் தெரிந்திருக்கும். இவர் பாலிவுட்டில் டாப்-5 ஒளிப்பதிவாளாராக வலம் வந்தவர், நடிப்பில் ஆசையால் கோலிவுட் பக்கம் திரும்பினார்.
naddu

Share This:
Loading...

Recent Posts

Loading...