சமைத்துக் கொண்டிருக்கையில் எரிந்து கொண்டிருந்த அடிப்பினுள் மண்எண்ணெயை ஊற்றிய பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக மரணம் – வவுனியாவில் சோகம்..!

Share this post:

man

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த சிவபாலன் பகீரதி ( வயது 25) என்ற யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்ணெய் அடுப்பில் தீ பற்றி எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 21ம் திகதி குறித்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்ணெய் அடுப்பில் மண்எண்ணை குறைந்துள்ளது.

எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மண்எண்ணெய் ஊற்றிய போது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ அடுப்பினை சுற்றி எரிந்துள்ளது.

இதை எதிர்பாராத யுவதி கையிலிருந்த மண்எண்ணெய் போத்திலினை வீசியுள்ளார்.

அப் போத்தலிலிருந்த மண்எண்ணெய் அவ்விடத்தில் சிந்திய போது மேலும் தீப் பரவி உடலில் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த யுவதியின் சகோதரி உடனடியாக தீயினை அணைத்து குறித்த யுவதியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தீயினால் ஏற்பட்ட மரணம் என தெரிவித்து சடலத்தினை உறவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...