சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலில் கவர்ச்சி பிரளயம் – கில்மாப் படமா சீரியலா – நெளியும் இல்லத்தரசிகள்..!

Share this post:

naakini

நாகினி சீரியலில் கவர்ச்சி பிரளயம் – நெளியும் இல்லத்தரசிகள்!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் ‘நாகினி’ நெடுந்தொடரில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதாக புலம்புகிறார்கள் இல்லத்தரசிகள்.
இந்த வாரம் திங்கள்கிழமை முதல், தினமும் இரவு 10 மணி முதல் 10.30 மணிவரை நாகினி என்ற புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது சன் டிவி.

ஹிந்தி மொழியில் உருவான இந்த சீரியலை சன் டிவி டப் செய்து ஒளிபரப்புகிறது. இதிகாச தொடர்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை தான் இதுவரை சன் டிவி ஹிந்தியில் இருந்து டப் செய்திருந்தது. தற்போது ஹனுமான் தொடரும் அவ்வாரே.
.
முதல் டப்பிங்……
முதல்முறையாக, தினமும் ஒளிபரப்பாகும் நெடுந் தொடரை ஹிந்தியில் இருந்து டப் செய்துள்ளது சன் டிவி. அந்த சீரியல்தான் நாகினி.

பழகாத முகங்கள், இடங்கள் போன்றவை ஹிந்தி டப்பிங் சீரியல்களை நோக்கி ரசிகர்களை இழுப்பதால், பிற போட்டியாளர்களை சமாளிக்க சன் டிவி, டப்பிங் சீரியலுக்கு தாவியிருக்கலாம் என தெரிகிறது.

நாகினி சீரியலில் வரும் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கைத்தரம், சம்பவம் நடைபெறும் இடங்கள் என அனைத்தும் பிரமாண்டமாக உள்ளன. இதனால் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் கிடைத்துள்ளது.

கவர்ச்சி மழை:
அதேநேரம், நாகினி சீரியலில் கவர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. தொடங்கி ஒரு வாரத்திலேயே கவர்ச்சி அள்ளி தெளிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. போகப்போக இன்னும் எப்படியெல்லாம் கவர்ச்சி அதிகரிக்குமோ, என கவலைப்படுகிறார்கள் இல்லத்தரசிகள்.

ஹீரோவிற்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள பெண், அரைகுறையாக சேலை உடுத்தியபடி, சர்வ சாதாரணமாக தொப்புளை காட்டி நடமாடுகிறார். குழந்தைகளோடு அமர்ந்து டிவி பார்க்கும் பெரியவர்களை இது நெளிய செய்கிறது.

மறைக்க வேண்டாமா?
இச்சாதாரி நாகம் என்ற பெயரில் நடிக்கும் இளம் பெண்ணும், அரைகுறை ஆடையோடு வருகிறார். மார்பகங்கள் வெளியே தெரியுமளவுக்கு இவரது நடனங்கள் அமைந்திருந்ததை பார்த்து, வீட்டில் பெரியவர்கள், பலரும் ரிமோட்டை தேடுகிறார்கள்.

தமிழி்ல் தயாராகும் சீரியல்களில் உடல் பாகங்களை மறைத்துக் கொண்டுதான் கதாப்பாத்திரங்கள் காட்டப்படும். ஹிந்தி நிலைமை வேறாக உள்ளது. மேலும், கதாநாயகன், ஒரு பெண்ணுடன் கட்டிலில் கட்டிப்பிடித்து உருளும் காட்சியும் நேற்று ஒளிபரப்பப்பட்டு, சீரியல் பார்த்த பெண்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டியது.

ஹிந்தி மொழி பேசும் மாநில கலாசாரம் வேறு, தமிழக கலாசாரம் என்பது வேறு. இதை ஓரளவுக்கு சமன்படுத்தும் அளவுக்கு சீரியல் இருக்க வேண்டும். வேறு வழியில்லை என்றால் அதுபோன்ற காட்சிகளை மறைத்து காட்டலாம். ஆனால் அப்படி செய்யாமல், ஒரேயடியாக கலாசார மீறல்களுடன் வரும் தொடர்கள் இல்லத்தரசிகளை முனுமுனுக்க வைத்துள்ளது.

நாகினி தொடரின் கவர்ச்சி அம்சம் குறித்து டிவிட்டரிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. சன் டிவி ல10 மணிக்கு நாகினினு ஒரு சீரியல் போட்ராப்ல. பாம்பா நடிக்கிற ஹிரோயின் வேற செம. இன்னைக்கு பாம்பு சட்டய களத்துற சீன் வருது‪#‎dontmissit‬. இப்படி ஒரு கமெண்ட் டிவிட்டரில் உள்ளது.

கில்மா படமா?
‘சன் டிவியில் திங்கள் இரவு முதல் நாகினி… இச்சாதாரி நாக கதை # சார். வீட்ல குடும்பத்தோட இருக்கோம், கில்மாப்படம் எல்லாம் போடாதீங்க’ என்று கில்மா படம் ரேஞ்சில் டிவிட்டியுள்ளார் சி.பி.செந்தில்குமார்.
.
‘நாகினி சீரியல்ல கவர்ச்சி தூக்கலா இருக்குதாம்.. நண்பன் கவலை அவனுக்கு’ என்று நண்பர்களுடனான உரையாடலில் நாகினி நாடகத்தின் கவர்ச்சி இடம் பெற்றதை சொல்கிறது ஒரு டிவிட்.

Share This:
Loading...

Recent Posts

Loading...