ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் குதிக்கப் போகும் தனியார் பஸ்கள்! – முடங்கவுள்ள இலங்கை…!

Share this post:

bus

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் கொழும்பில் இன்றுஇடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காததால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தனியார் பஸ்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அனைத்து இலங்கை தனியார் பஸ்கள்சம்மேளனம், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சங்கம், தென் மாகாண பஸ்சங்கம், இலங்கைதனியார் பஸ் உரிமையளார்களின் சங்கம் உட்பட பஸ் சங்கங்கள் பல கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.

அத்துடன் வருடhந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக இதன் போதுகலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இன்று இடம்பெறவிருந்த பஸ் கட்டண திருத்ததை மிகவிரைவாக மேற்கொள்ள வேண்டும் என பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைவிடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பஸ்கட்டணம் திருத்தம் குறித்த வரையறைகள் தொடர்பாக நிபுணக் குழுவின்ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் இதன் போதுதெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் சம்மேளனத்தின்செயலாளர் அஞ்சன பிரயஞ்சித், கலந்துரையாடல் வெற்றியளிக்காமையினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...