மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை எரித்த கணவன்!

Share this post:

neruppudaa

மனைவியை கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பாதுக்கை, பானலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், 24 வயதான ஒரு குழந்தையின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ம் திகதி கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையடுத்து குறித்த பெண் கணவரால் தீ வைக்கப்பட்டுள்ளார்.

தீ காயங்களுக்குள்ளன குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...