இரு சிறுவர்களைத் தாக்கிய மின்சாரம் – காப்பாற்றச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்..!

Share this post:

minsaaram

பிரான்சில் மின்சாரம் தாக்குவதில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற முனைந்த இரண்டு பேர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரான்சின் சாவோய் பகுதியில் சிறுவர்கள் விளையாடும் திடலுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கென லொறிகளில் மணல் ஏற்றி இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

தந்தை வாகன ஓட்டுனர் என்பதால் அந்த லொறியில் இளைஞர் ஒருவரும் நான்கு வயது சிறுமியும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த லொறியின் முகப்பில் இருந்த வாளி ஒன்று மின்சாரக் கம்பியில் மோதி அறுந்து விழுந்ததில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து அந்த இளைஞர் மற்றும் சிறுமியை தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தை அப்பகுதியில் இருந்து கவனித்து வந்த அதிகாரி ஒருவர் அந்த குழந்தைகளின் தந்தையுடன் துரிதமாக செயல்பட்டு அந்த சிறுமி மற்றும் இளைஞரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

இதனிடையே அந்த லொறி தீ பிடித்து எரிந்துள்ளது. சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சிறுவர்களின் தந்தை படுகாயத்துடன் மீட்பு குழுவினரால் மீட்கபட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பின்னர் தெரிய வந்தது.

நான்கு வயது சிறுமி உடல் முழுவதும் நெருப்பு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் 2 ஹெலிகொப்டர்கள், 3 மருத்துவர்கள், 10க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் உள்ளிட்டவர்கள் உடனடியாக வந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 380 குடியிருப்புகளுக்கு மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...